உதயநிதிக்கு ஜோடியாகிறாரா சமந்தா

உதயநிதிக்கு ஜோடியாகிறாரா சமந்தா சூர்யாவுடன் 'அஞ்சான்', விஜய்யுடன் 'கத்தி', விக்ரமுடன் 'இடம் மாறி இறங்கியவன்' படத்தில் நடிக்கும் சமந்தா அடுத்து உதயநிதியுடன் நடிக்க இருக்கிறாராம். உதயநிதி தற்போது எம்.ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கும் 'நண்பேன்டா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு, அஹமத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அஹமத் இயக்கிய 'என்றென்றும் புன்னகை' ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. படத்தை உதயநிதிதான் ரிலீஸ் செய்தார். இப்போது அஹமத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் உதயநிதி. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் உதயநிதியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Tags: 

Leave a Reply