கிராமப் பெண்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி

கிராமப் பெண்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி டிவிஎஸ் தொழிற்சாலைகள் சார்பில் செயல்படும் ஆரோக்யா நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் கிராமப்புற பெண்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி வழங்கப்படுவதாக, இத்திட்டத் தலைவர் ஜெ.வெண்ணிலா தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கத்தப்பட்டி, வெள்ளரிப்பட்டி, நரசிங்கம்பட்டி, பெருமாள்பட்டி, முத்துப்பட்டி, புதுக்குளம் ஆகிய கிராமங்களில் 2010-ஆம் ஆண்டு முதல் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. 2011-ஆம் ஆண்டு முதல் மகளிர் குழுக்கள் துவங்கப்பட்டு, 930 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குழுவிலுள்ள பெண்களுக்கு இலவசமாக சுயதொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக தொழில்முனைவோர் குழு துவங்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் 128 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். உணவுப்பொருள் உற்பத்தி, பினாயில், சாம்பிராணி, பைகள் தயாரித்தல், கவரிங் நகைகள் தயாரித்தல், சிறுதானிய உணவுகள் தயாரித்தல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வளைகாப்பு, திருமணம் போன்ற விழாக்களுக்கு மொத்தமாக உணவு தயாரித்தும் கொடுக்கப்படுகிறது. மேலும் பல கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக சுயதொழில் பயிற்சி வழங்க தயாராக இருக்கிறோம். விருப்பமுள்ள மகளிர் குழுவினர்,கிராமப்புற பெண்கள் அலைபேசியில் 9994443459, 9585502186, 9585502680 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சுயதொழில் பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஊராட்சித் தலைவர்கள் மூலமும் கிராமங்களிலுள்ள பெண்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர், என்றார்.

பேட்டியின்போது, அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆர்.சீனிவாசன், கேவி பாலசுப்பிரமணியன், ஆர்.சுப்பிரமணியன், டி.ஜெகந்நாதன், டி.சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமன் உடனிருந்தனர்.

Tags: 

Leave a Reply