ஐபிஎல் டி20: ஸ்மித்தின் அபார ஆட்டத்தால் சென்னை வெற்றி

ஐபிஎல் டி20: ஸ்மித்தின் அபார ஆட்டத்தால் சென்னை வெற்றி நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தோற்க்கடித்தது. சென்னை அணியின் ஸ்மித் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் குவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 26 ஆவது போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியைச் சேர்ந்த டி காக்- முரளி விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதலில் கள்மிறங்கிய டி காக் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடி வந்தார். அவர் 16 பந்தில் 24 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த பீட்டர்சன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து 3 ஆவது விக்கெட்டுக்கு விஜயுடன், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினர். இதனால் ரன் விகிதம் அதிரடியாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய கார்த்திக் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 36 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். விஜய் முரளி 30 பந்தில் 35 ரன் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் வந்த டுமினி, ஜாதவ் அதிரடியாக விளையாட டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. டுமினி 17 பந்தில் 28 ரன்னும், ஜாதவ் 18 பந்தில் 29 ரன்னும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் ஹில்பெனாஸ், மோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெக்கல்லம்- ஸ்மித் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். மெக்கல்லம் 32 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து ஸ்மித்துடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் டெல்லி அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினர். இவர்கள் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் பீட்டர்சன் பல உத்திகளை கையாணடது போல தெரிந்தது. ஆனால் பாவம் ஏதுவும் பலனளிக்கவில்லை. கடைசியில் ஸ்மித் 51 பந்துகளில் 79 ரன் எடுத்திருக்கும்போது அவுட் ஆனார். அதன்பின் ரெய்னாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சென்னை அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். ரெய்னா 47 ரன்னுடனும், டோனி 12 ரன்னுடனும் களத்தில் இருந்தபோது, 19.4 ஓவரில் 181 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Tags: 

Leave a Reply