நான் ஹீரோவான நீதான் மச்சான் டைரக்ஷன் - சந்தானம்

நான் ஹீரோவான நீதான் மச்சான் டைரக்ஷன் - சந்தானம் எந்தப் படத்தின் பிரஸ்மீட்டுக்கும் வராத சந்தானம் தான் ஹீரோவாக நடித்திருக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார். இனி ஹீரோவா இல்லை காமெடியனா என்ற குழப்பம் அவருக்கு இருக்கிறது. அதேநேரம் எதுவாக இருந்தாலும் தொடர் வெற்றிதான் இலக்கு என்ற தாராளமாக இருக்கிறது சந்தானத்திடம். வெடிகுண்டையே கேள்வியாக்கி வீசினாலும் ம்ஹும்... சந்தானத்திடம் சின்ன பதற்றமில்லை. அறை எண் 305 -ல் கடவுள் படத்துக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாகியிருக்கீங்க...? அறை எண் 305 -ல் கடவுள் படத்துல நடிச்சிருந்தாலும் அந்தப் படத்துல மூணு ஹீரோஸ். பிரகாஷ்ராஜ் சார், கஞ்சா கருப்பு, நான். மூணு பேருமே லீட் ரோல். அதனால அதை ஹீரோன்னு சொல்ல முடியாது, லீட் ரோல்னுதான் சொல்ல முடியும். ஒரு ஹீரோவா எனக்கு முதல் படம்னா அது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்தான்.

Tags: 

Leave a Reply