அமெரிக்க ஸ்குவாஷ் போட்டி: தீபிகா பலிக்கல் இறுதிப்போட்டிக்கு தகுதி

அமெரிக்க ஸ்குவாஷ் போட்டி: தீபிகா பலிக்கல் இறுதிப்போட்டிக்கு தகுதி அமெரிக்க ஸ்குவாஷ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தீபிகா பலிக்கல் முன்னேறியுள்ளார்.

டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்தியாவின் தீபிகா பலிக்கலும், நடப்பு சாம்பியன் அயர்லாந்தின் மேட்லைன் பெர்ரியும் சந்தித்தனர்.

இருவரும் நீயா–நானா? என்று சளைக்காமல் மல்லுகட்டியதால் ஆட்டம் திரிலிங்காக 75 நிமிடங்கள் வரை நீடித்தது. இறுதியில் வெற்றிக்கனி தீபிகா வசம் ஆனது. அவர் 11–7, 11–13, 13–11, 10–12, 11–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரை இறுதியில் எகிப்து நாட்டின் நூர் எல் ஷெர்பினி 11–5, 11–9, 9–11 11–6 என்ற செட் கணக்கில் கேமிலி செர்மியை (பிரான்ஸ்) தோற்கடித்தார். சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தீபிகா பலிக்கலும், நூர் எல் ஷெர்பினியும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

Tags: 

Leave a Reply