பெண்கள் மீது தாக்குதல் நடத்துபவனிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய கிளி

பெண்கள் மீது தாக்குதல் நடத்துபவனிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய கிளி லண்டன் 25 வயது மதிக்க தக்க ஒரு பெண் தனது செல்லப்பறவையான ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளி வுன்சியுடன் லண்டன் சன்னி ஹில் பார்க்கில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் அந்த பெண்ணை தாக்கி உள்ளான்.இதை பார்த்த கிளி தனது எஜமானரை காப்பாற்ற, போராடி உள்ளது மர்ம மனிதனை அது தாக்கி உள்ளது. அருகில் இருந்த போலீசாருக்கும் தகவ்ல் கொடுத்து உள்ளது இதனால் போலீசார் அங்கு வருவதற்குள் மர்ம மனிதன் தப்பி ஓடி விட்டான்., இது குறித்து போலீஸ் அதிகாரி சீரிஸ் குரோம் கூறியதாவது:- மிகவும் புத்திசாலியான கிளி தனது எஜமானரை காப்பாற்ற போராடி உள்ளது. வழக்கமாக நடைபயற்சிக்கு வரும் பெண்களிடம் அந்த மர்ம மனிதன் தொடர்ந்து தொல்லை கொடுத்து உள்ளான்.இந்த பெண்ணை அவன் கீழே தள்ளி விட்டு தாக்கி உள்லான்ன். இதை பார்த்த செல்லப்பறவை அவனை தாக்கி சாத்தம் போட்டு உள்ளது. இதனால் அவன் தப்பி ஓடி உள்ளான் என கூறினார்.

Tags: 

Leave a Reply