ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் இரகசியம் என்ன?

ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் இரகசியம் என்ன? திருமூலரின் திருமந்திரத்தில் - (ஆண்/பெண் குழந்தை பிறக்க):

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என திருமூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில் குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே (திருமந்திரம் 482)

பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால்,உடலுறவில் ஈடுபட்ட பின்னர் பெண் தனது இடப்பக்கம் சாய்ந்தும், ஆண் குழந்தை வேண்டுமென்றால் வலப்பக்கம் சாய்ந்தும் இருக்க வேண்டும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், சூரியன் சிம்மத்திலும், சந்திரன் கன்னி, விருச்சிகம் அல்லது தனுசுவில் இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாம் என்றும், பெண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், சந்திரன் மங்கும் நேரத்திலும், துலாம் அல்லது கும்பத்தில் இருக்கும்போதும் உடலுறவில் ஈடுபடலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூரிய வழிமுறைகளை பற்றி பார்போம்:

1. இரவில் அரை வயிறளவு மட்டும் தான் சாப்பிட வேண்டும். சிறிது பால், 2 பழம் சாப்பிட வேண்டும். இடது கை பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். இரவு முழுக்க அப்படித் தான் படுத்திருக்க வேண்டும்.

அப்போது வலது புறத்தில் சூரியக்கலை இயங்கிக் கொண்டிருக்கும்.விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, 5 நிமிடம் தியானம் செய்துவிட்டு,பெண்ணுடன் உறவு கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை தான் பிறக்கும் என்கின்றனர் சித்தர்கள்.

2. அரைவயிறு சாப்பிட்டுத் தூங்கும் போது,அதிகாலையில் பசி அதிகரிக்கும்.சூரியக்கலையில் வயிறு பசியாக இருக்கும் போது,உடலுறவு கொள்ள வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். அப்படி செய்தால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்குமாம்.

3. ஆண் குழந்தை வேண்டுமென்றால் பெண் மாதவிலக்கான நாளிலிருந்து முறையே, 6,8,10,12, 14, 16, 18 ஆவது நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும் என்கின்றனர் சித்தர்கள்.

ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவி புரியும் ஒருசில உணவுப் பொருட்கள்கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

ஆண் குழந்தை பிறக்க உதவியாக இருக்கும் அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா:


1. வாழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், அதனை உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது.

2. நல்ல ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். அத்தகைய வைட்டமின் டி மற்றும் பொட்டாசியமான அதிக அளவில் காளானில் இருப்பதால், இதனை தம்பதிகள் உணவில் சேர்த்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.

3 .குளுக்கோஸ் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், உடலில் கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்.

4.ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும்.எனவே ஜிங்க் நிறைந்த கடல் உணவுகளான கடல் சிப்பியை ஆண்கள் அதிகம் எடுத்து வருவது நல்லது.

5. சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் கூட ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே கருத்தரிக்கும் முன் சோடியம் நிறைந்த உப்புள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது நன்மை உண்டாகும்.

6. தக்காளியிலும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சரியான அளவில் நிறைந்துள்ளது.மேலும் அத்துடன் வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் அவை உடலில் உள்ள pH-இன் அளவை சீராக பராமரித்து, ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.


Tags: 

Leave a Reply