மேயரை இனி கவுன்சிலர்களே தேர்வு செய்யலாம்... அதிமுக அரசின் திடீர் சட்ட திருத்தம்.. திமுக எதிர்ப்பு!

மேயரை இனி கவுன்சிலர்களே தேர்வு செய்யலாம்... அதிமுக அரசின் திடீர் சட்ட திருத்தம்.. திமுக எதிர்ப்பு! சென்னை: மாநகராட்சி கவுன்சிலர்கள் மட்டுமே மேயரை தேர்வு செய்யும் மாநகராட்சி சட்டத்திருத்த முன்வடிவை சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்துள்ளார்.
இந்த முன்வடிவை ஆரம்பநிலையிலே எதிர்ப்பதாக திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியம் பேசிய நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் மாநகராட்சி சட்ட திருத்த முடிவடிவினை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். இந்த சட்டத்தில், மாநகராட்சி மேயரை கவுன்சிலர்கள் மட்டுமே, தேர்வு செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக திமுக உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
தேர்தலில் புதிய மாற்றத்தை அதிமுக அரசு கொண்டு வருகிறது.இதன்படி மேயரை இனிமேல் கவுன்சிலர்கள்தான் செய்வார்கள். இன்று சட்டசபையில் மாநகராட்சி சட்ட திருத்த முன்வடிவினை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி இன்று தாக்கல் செய்தார். அதில், தற்போது மாநகராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுகிறது. மேயர் ஒரு கட்சியைச்சேர்ந்தவராகவும், மாமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருப்பதால் ஒரு சில மாநகராட்சிகளும் சரியாகச் செயல்படவில்லை என்று அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
எனவே மாநகராட்சி ஒன்றின் மேயர் மாமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருந்தால்,மன்றம் சிறப்பான முறையில் செயல்பட முடியும் என்று கருதப்படுகிறது. எனவே மாநகராட்சி மேயர்களை மறைமுகமாக மாமன்ற உறுப்பினர்களால் அவர்களிடையே இருந்து தேர்ந்தெடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
மேற்சொன்ன முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அரசு, மாநகராட்சி தொடர்பான சட்டங்களை பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வதென முடிவு செய்திருக்கிறது. இச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்துள்ள சட்டதிருத்த முன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் நாளை நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி,திருப்பூர், திண்டுக்கல், வேலூர்,ஈரோடு, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 12 நகரங்கள் மாநகராட்சிகளாக உள்ளன. இங்கு உள்ள மேயர் பதவிக்கு கடந்த தேர்தலில் மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்தனர். இதனால் சில குழப்பங்கள் ஏற்பட்டன.
அதாவது மேயர் ஒரு கட்சியைச்சேர்ந்தவராகவும், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வேறு கட்சிகளைச்சேர்ந்தவராகவும் இருந்ததால், யார் பெரியவர் என்ற சண்டையிலேயே மாநகராட்சிகள்நேரத்தை செலவிட்டு வருகின்றன. இதனால் மக்கள் நலப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த குழப்ப நிலைக்கு மிகப் பொருத்தமான உதாரணமாக சென்னை மாநகராட்சி இருந்தது.

Tags: 

Leave a Reply