எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது சென்னை :

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசை பட்டியல் குறித்த விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மருத்துவ தரிவரிசை பட்டியலில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா மகேசும், 2வது இடத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேசும், 3வது இடத்தை விஜயவாடாவைச் சேர்ந்த ஜெய ஞானவேலும் பிடித்துள்ளனர் .

நடப்பாண்டில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 2723 இடங்கள் உள்ளன. பிடிஎஸ் படிப்பிற்கு 1055 இடங்கள் உள்ளன. 2 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளுக்கான 130 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுவரை மருத்துவ கவுன்சிலிங்கிற்கு 27, 450 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 20 ம் தேதி துவங்க உள்ளது.

Tags: 

Leave a Reply