குரங்குபோல உருவத்தை மாற்றும் ஜிக்கா வைரஸ்.. முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

குரங்குபோல உருவத்தை மாற்றும் ஜிக்கா வைரஸ்.. முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி? சென்னை: ஜிக்கா வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிக்கா என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு இப்பெயர் வந்தது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் இந்த வைரசும் பரவுகிறது.
ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது. 2007ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது. அதன்பிறகு, 2015ம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.

Tags: 

Leave a Reply