அரண்மனை 2 தமிழ் படத்துக்கு நீதிபதி கெடு

அரண்மனை 2 தமிழ் படத்துக்கு நீதிபதி கெடு சுந்தர் சி. இயக்கியிருக்கும் அரண்மனை 2 படம் வரும் 29 -ஆம் தேதி வெளியாவதாக விளம்பரம் செய்து வருகின்றனர். ஆயிரம் திரையரங்குகளில் படத்தை வெளியிட ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், நீதிபதி அரண்மனை 2 படத்துக்கு கெடு விதித்துள்ளார்.
அரண்மனை படம், ரஜினி, லதா நடித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தை தழுவி எடுத்தது. ஆயிரம் ஜென்மங்கள் படத்தை தயாரித்த எம்.முத்துராமன் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். இப்போது, அரண்மனை 2 வெளியாவிருக்கும் நிலையில் மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளார்.
ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதையைப் போலவே அரண்மனை படத்தின் கதை இருப்பதாக நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இரு படங்களையும் பார்த்த வழக்கறிஞர் அறிக்கை தந்துள்ளார். இந்நிலையில் அரண்மனை 2 பெயரில் இன்னொரு படத்தை வெளியிடும் போது அது என்னை பாதிக்கும், அதனால் அரண்மனை 2 படத்தை தடை செய்ய வேண்டும் என்று எம்.முத்துராமன் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை விசாரித்த நீதிபதி, வரும் 28 -ஆம் தேதிக்குள் முத்துராமனும், சுந்தர் சி.யும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சுமூகமாக முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் 28 -ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Tags: 

Leave a Reply