தனித் தீவானது சென்னை: புறநகர் மின்சார ரயில்கள் சேவையும் நிறுத்தம்

தனித் தீவானது சென்னை: புறநகர் மின்சார ரயில்கள் சேவையும் நிறுத்தம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே முடங்கியது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து தடை பட்டது. விமான நிலையங்களும் மூடப்பட்டன.
தாம்பரம் பகுதியில் நேற்று இரவு முதல் போக்குவரத்து தடைபட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையங்களில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம்,செங்கற்பட்டுவரையிலான மின்சார ரயில் சேவை இன்று பிற்பகல் 12 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை மூர்மார்க்கெட்- திருவள்ளூர் வரையிலான ரயில் சேவை பிற்பகல் 10 மணி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த ரயில் சேவைகள் நிறுத்தம் மேலும் சில மணி நேரங்களுக்கு ரத்து செய்யபட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதன்மூலம் பேருந்து சேவை,விமான சேவை மற்றும் ரயில்சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி இணைப்புகளும் தடைபட்டுள்ளது. தற்போது மழை தொடர்ந்து பெய்துவருவதால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

Tags: 

Leave a Reply