மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த 11 ம் வகுப்பு மாணவிகள் : திருச்செங்கோட்டில் பரபரப்பு செய்தி

மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த 11 ம் வகுப்பு மாணவிகள் : திருச்செங்கோட்டில் பரபரப்பு செய்தி திருச்செங்கோடு அருகே உள்ள அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 4 மாணவிகள் மது அருந்திவிட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழகத்தின் குடிப்பவரின் எண்னிக்கையும் அதிகரித்து வருகிறது. பெரியவர்கள் மட்டுமில்லாமல் ஏராளமான இளைஞர்களும் மதுப் பழக்கத்திற்கு பழகிவிட்டனர்.

போதாது என்று, நான்கு வயது சிறுவன் மது அருந்தும் வீடியோ, மற்றும் இளம்பெண்கள் மது அருந்தும் வீடியோக்கள் என்று சமூக வலைத்தளங்கள் களை கட்டிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி மாணவி நன்றாக குடித்துவிட்டு, மது போதையில், சாலையில் மயங்கி கிடந்த சம்பவம், எல்லோரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இதற்கு நாங்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்று நிரூபித்திருக்கிறார்கள் திருச்செங்கோட்டை சேர்ந்த பள்ளி மாணவிகள். +1 படிக்கும் அந்த மாணவிகள், பள்ளியில் உடன் படிக்கும் தோழியின் பிறந்த நாளை மதுபான‌ பார்ட்டியோடு கொண்டாடி விட்டு , மது போதையிலேயே பள்ளிக்கு வந்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. இப்படி ஆண்களுக்கு இணையாக பள்ளி மாணவிகளும் மதுப் பழக்கத்திற்கு ஆளாவது சமூகத்தை எங்கு கொண்டு செல்லுமோ....

Tags: 

Leave a Reply