புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: விடிய விடிய கன மழை வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: விடிய விடிய கன மழை வாய்ப்பு சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகள் மக்கள் மீண்டும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். மீண்டும் கன மழை பெய்து வருவதால் மறுபடியும் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்ப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் பல பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை உட்பட வடமாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்தது. சென்னையில் காலையில் வெயில் அடித்தாலும், பின்னர் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது.

நேற்று இரவு 8 மணியளவில் முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, புரசைவாக்கம், மூலக்கடை, பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், புழல் உட்பட நகரின் பெரும்பான்மையான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஏற்கனவே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால், மீண்டும் பெய்த பலத்த மழையால் தண்ணீர் நிலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

source: dinamani

Tags: 

Leave a Reply