சென்னை: மழை காரணமாக‌ பள்ளி–கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: மழை காரணமாக‌ பள்ளி–கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கனமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்த நிலையில், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், மேல் சுழற்சி காரணமாக இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளி – கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: 

Leave a Reply