கபாலி அமெரிக்க உரிமை: பெரும் விலைக்கு வாங்கியது சினி கேலக்ஸி!

கபாலி அமெரிக்க உரிமை: பெரும் விலைக்கு வாங்கியது சினி கேலக்ஸி! ரஜினி நடித்து வரும் கபாலி படப்பிடிப்பு இன்னும் பாதி கூட முடியவில்லை. அதற்குள் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்க நான் நீ என மோத ஆரம்பித்துவிட்டனர். முதல் கட்டமாக படத்தின் அமெரிக்க உரிமை பெரும் விலைக்கு கைமாறியுள்ளது. இதனை சினி கேலக்சி நிறுவனம் வாங்கியுள்ளது. வட அமெரிக்கா முழுவதும் இந்த நிறுவனம்தான் கபாலியை வெளியிடுகிறது.
.
கபாலியின் தெலுங்குப் பதிப்பு உரிமையையும் இந்த நிறுவனமே பெற்றுள்ளது. ரஞ்சித் இயக்கிவரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு இன்னும் சென்னையில்தான் நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் மலேஷியாவுக்குக் கிளம்புகிறது கபாலி படப்பிடிப்புக் குழு. ரஜினியும் அவர்களுடன் புறப்படுகிறார். .
.

Tags: 

Leave a Reply