குழந்தை திருமண தடைச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும்: குஜராத் உயர்நீதிமன்றம்

குழந்தை திருமண தடைச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும்: குஜராத் உயர்நீதிமன்றம் குஜராத்தில் யூனஸ் ஷாகித் என்ற 16 வயது சிறுவனக்கும் அதே வயது ஒத்த சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பரித்துவாலா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது சிறுவன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், இஸ்லாமிய மதச்சட்டப்படி திருமணம் செய்திருக்கும் ஷாகித்துக்கு இந்திய குழந்தை திருமண தடைச் சட்டம் பொருந்தாது என்று வாதிட்டார். ஆனால் ஷாகித் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதி நிராகரித்தார். குழந்தை திருமண தடைச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதி, இவ்விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Tags: 

Leave a Reply