குடும்ப வருமானத்திற்காக மூன்றில் இரண்டு பங்கு பேர் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடும்ப வருமானத்திற்காக மூன்றில்  இரண்டு பங்கு பேர்  பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியக் கல்வி மற்றும் தொழில்சார் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த ஆய்வின் படி, 70 சதவிகிதம் பேர் குடும்ப வருமானத்திற்காக தங்களின் பள்ளிப்படிப்பை பாதியிலேயே இடைநிறுத்தம் செய்வதாக குறிப்பிட்டுள்ளது. இந்த விகிதாச்சாரம் கிராமப்பகுதிகளில் 27 சதவிகிதமாகவும், நகர்புறங்களில் 26 சதவிகிதமாகவும் உள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 2.2 சதவிகிதம் பேர் முறையான தொழிற்கல்வியை பெற்றுள்ளதாவும், 8.6 சதவிகிதம் பேர் முறையற்ற தொழிற்கல்வியை பெற்றுள்ளதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Tags: 

Leave a Reply