717 பேர் பலியான மெக்கா விபத்துக்கு ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களே காரணம்? பரபரப்புத் தகவல்கள்

717 பேர் பலியான மெக்கா விபத்துக்கு ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களே காரணம்? பரபரப்புத் தகவல்கள் மெக்கா விபத்துக்கு ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களே காரணம் என்று சவுதி அரசர் குற்றஞ்சாட்டி இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெக்கா பெரிய மசூதி மீது கடந்த 11 ஆம் தேதி கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 115 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இச்சோகச் சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரச் சம்பவம் மெக்காவில் அரங்கேறியுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணம் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களின் மதக் கடமையை ஆற்ற மெக்காவுக்கு படை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் மினா அருகே சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் நேற்று திரண்டிருந்தனர். அப்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 830 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் 717 பேர் உயிரிழந்த கூட்டநெரிசலுக்கு ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களே காரணம் என்று சவுதி அரசரும் ஹஜ் கமிட்டித் தலைவருமான அல்பைசல் குற்றஞ்சாட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டு அரசின் ஊடகமான அல் அரேபிய செய்தித் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

சவுதி அரசரின் இந்த சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அல் பைத்தும் கூறி வருகிறார். இது குறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், " அதிகாரிகள் வகுத்துக் கொடுத்த அட்டவணையை சில யாத்திரீகர்கள் பின்பற்றவில்லை. பாதுகாப்பு விதிமுறைகளை யாத்திரீகர்கள் பின்பற்றி இருந்தால் இந்த கோரச் சம்பவம் நடைபெற்றிருக்காது" என்று தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply