வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு மத்திய அரசின் புதிய கொள்கையால் வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் மற்றும் உரையாடல்களை அனுப்புவோர் அதனை இனி 90 நாட்களுக்கு பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும்.

சமீபகாலமாக சமூக அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் இணையதள செயலிகளில் வாட்ஸ்அப் முதன்மையானதாக திகழ்கிறது. நாளொன்றுக்கு கோடிக்கணக்கான தகவல்கள் வாட்ஸ் அப் மூலம் பரிமாறப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. .

இந்நிலையில் இதை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தேசிய வரைவு கொள்கை ஒன்றை மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைத்த வல்லுனர் குழு உருவாக்கி உள்ளது. .

இந்தக் கொள்கை படி இனி வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்பவர் இனி அந்த தகவல்களை 90 நாட்களுக்கு பத்தரப்படுத்தி வைக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள், காவல்துறை, இதர விசாரணை அமைப்புகளோ கேட்கும் போது அந்தத் தகவல்களை உடனடியாக அளிக்க வேண்டும். அவ்வாறு தகவல்களை அளிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். .

இந்தப் புதிய சட்டவதிமுறை அடித்தட்டு குடிமகன் துவங்கி தொழில் அதிபர் வரை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அமைப்புகளிடம் கருத்துகளை கேட்பதற்காக, அந்த கொள்கை நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது.இந்தக் கொள்கை குறித்து அக்டோபர் 16 ஆம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: 

Leave a Reply