குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் பெறுவது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் பெறுவது குறித்து 
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு மதுரை:
குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் பெறுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா கூறியதாவது:

குழந்தையின் தாய், தந்தை இருவரும் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு வர வேண்டும். பெற்றோரில் ஒருவர் மட்டும் இருந்தால் 'அனெக்ஸ் -எச்' படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டிலும், மற்றொருவர் இந்தியாவிலும் இருந்தால், இந்தியாவில் உள்ளவர் 'அனெக்ஸ் -ஜி' படிவம் கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ளவர் 'அனெக்ஸ்- எச்' படித்தை துாதரக ஒப்புதலுடன் அனுப்ப வேண்டும்.

சட்டப்பூர்வ பாதுகாவலர் 'அனெக்ஸ்- ஜி' அல்லது 'அனெக்ஸ்- எச்' இணைத்து அனுப்ப வேண்டும்.பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிரமாண பத்திரம், அங்குள்ள துாதரகம் ஒப்புதலுடன் அனுப்ப வேண்டும். பெற்றோரில் ஒருவர், மற்றொருவர் குறித்து தெரியாத பட்சத்தில் 'அனெக்ஸ் -சி' படிவத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பெற்றோரில் ஒருவரால் மற்றொருவரின் கையெழுத்து பெற முடியாத பட்சத்தில் 'அனெக்ஸ் -ஜி' படிவத்தை பயன்படுத்த வேண்டும். 'சி மற்றும் ஜி' படிவங்கள் மீது போலீஸ் விசாரணைக்கு பின் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றார்.

Tags: 

Leave a Reply