40 ஆண்டுகால அனுபவங்களை புத்தகமாக்கியவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்,'' என அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் குறிப்பிட்டார்.

40 ஆண்டுகால அனுபவங்களை புத்தகமாக்கியவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்,'' என அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் குறிப்பிட்டார். மதுரை:
''தனது 40 ஆண்டுகால அனுபவங்களை புத்தகமாக்கியவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்,'' என அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் குறிப்பிட்டார்.

மதுரை புத்தக கண்காட்சியில் அவர் பேசியதாவது:நான் பத்தாம் வகுப்பு படித்தபோது 1980 ல் எஸ்.எல்.வி., ராக்கெட்டை கலாம் விண்ணில் செலுத்தியதாக செய்தி தாளில் படித்தேன். கலாம் போல் நாமும் விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. பின் விஞ்ஞானிக்கான தேர்வில் வெற்றி பெற்று டி.ஆர்.டி.ஓ.,வில் பணியில் சேர்ந்தேன். அதன் தலைவராக கலாம் இருந்தார். எனது மனதில் லட்சிய விதைகளை விதைத்தவர் கலாம். எனக்கு மட்டுமல்ல, இந்திய இளைஞர்கள், மாணவர்களின் கனவில் லட்சிய விதைகளை விதைத்தவர் கலாம். அது விருட்சகமாக வளர வேண்டும்.

இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும் என்பது கலாமின் கனவு. இதற்காக அவரது 40 ஆண்டுகால அனுபவங்கள், அர்ப்பணிப்புகளால் உருவானது 'இந்தியா 2020'. தனது அனுபவங்கள் ஒவ்வொன்றையும் புத்தகங்களாக உருவாக்கினார். அதன் மொத்த வெளிப்பாடு தான் 'அக்னி சிறகுகள்'. இந்தியா 2020, இதை பத்து கட்டளைகளாக மாற்றி, ஒவ்வொன்றுக்கும் ஒரு குழுவை அமைத்து பார்லி., சட்டமன்றம், கல்வி கூடங்கள், பல்கலை கழகங்கள், வர்த்தக அமைப்புகள் என அனைத்து தரப்பிலும் எடுத்து சென்றார். அவரது எண்ணங்களை முழுமையாக, உண்மையாக செயல்படுத்தினால் இந்தியா ஐந்தே ஆண்டுகளில் முன்னேற்றம் காணும்.

தத்துவஞானி சாக்ரடீஸ் இறுதி மூச்சு விட்ட குகைக்குள் கலாம் சென்றார். வேறு யாரையும் தன்னுடன் வர அனுமதிக்கவில்லை. அங்கு 15 நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். அவரை பற்றி அறிந்த உக்ரைன் நாட்டு மன்னர், கலாமின் கால்களை தொட்டு வணங்கஅனுமதிக்கும் படி கேட்டார். இது அவருடன் நான் பயணித்தபோது நடந்த சம்பவம். சாக்ரடீஸ் மூச்சு விட்ட இடத்தில் கலாம், இந்திய இளைஞர்களுக்காக பிரார்த்தனை செய்தார் என்றார். புத்தக கண்காட்சி செப்.,7 வரை தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.

Tags: 

Leave a Reply