சென்னை கிண்டியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் வளாகம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை கிண்டியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் வளாகம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு சென்னை: சென்னை கிண்டியில் 100 கோடி ரூபாய் செலவில் புதிதாக அடுக்குமாடி தொழில்வளாகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த அவர் கிண்டி தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்கு நிலம் பாற்றாக்குறையாக இருப்பதால் அடுக்குமாடி தொழில்வளாகம் அமைப்பது அவசியம் என்றார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய அடுக்குமாடி தொழில்வளாகம் உருவாக்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் உலகளவிலான போட்டி திறனை அதிகரிக்கும் வகையில் பன்னாட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறிய அவர் இத்துறைக்காக புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னை எழும்பூர், தண்டையார்பேட்டை, கோவை வடக்கு, மேலூர்(மதுரை), சாத்தூர் புதிதாக 5 வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் கீழ்பெண்ணாத்தூர்( திருவண்ணாமலை), நல்லம்பட்டி( தருமபுரி), விழுப்புரம் (செஞ்சி) உட்பட 16 வருவாய் வட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறினார்.

17 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு வருவாய் துறையினரின் சேவை விரைந்து கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply