தமிழ்நாடு கவர்னராக ஜஸ்வந்த் சிங்கிற்கு வாய்ப்பு?

தமிழ்நாடு கவர்னராக ஜஸ்வந்த் சிங்கிற்கு வாய்ப்பு? ஜெய்ப்பூர்:பா.ஜ.க.,விலிருந்து வெளியேறிய மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்கிற்கு தமிழ்நாடு கவர்னராக ஆக வாய்ப்புள்ளதாக பா.ஜ.க.,வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜஸ்வந்த்சிங் மீண்டும் பா.ஜ.க.,விற்கு வரும் திட்டம் உள்ளதால் அவருக்கு கவர்னர் பதவி வழங்க பா.ஜ.க., தரப்பு தயாராகி வருகிறது.

சமீபத்தி்ல் லோக்சபா தேர்தலில் பார்மர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிட்டு தோற்றார்.பின்னர் பா.ஜ.க., வெற்றி பெற்று மத்திய ஆட்சியில் அமர்ந்தது. இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ஜஸ்வந்த்சிங்கிற்கு கடிதம் எழுதினார்.ஜஸ்வந்த்சிங் அமைதிகாத்து வந்தார்.

ஜஸ்வந்த்சிங்கை தொடர்ந்து மாநில அரசியலில் உள்ள அவரது மகன் மனவேந்திராவும் தந்தைக்கு ஆதரவாக பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதற்கு பதிலளிக்கவும் 15 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது.இந்நிலையில் விரிசல் அதிகரித்தது.ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே இவர்களுக்கு மறைமுக நெருக்கடி கொடுத்து வந்தார்.பின்னர் ஜஸ்வந்த்சிங் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.இதனால் சமரச முயற்சிகள் மேற்கொள்வதை தொடர்ந்து தற்போதைய சூழலில் ஜஸ்வந்த்சிங் கட்சிக்கு திரும்பினால் அவரது மகனும் விரைவில் பா.ஜ.க., இணைவார் என்றே தெரிகிறது.அவ்வாறு ஜஸ்வந்த்சிங் பா.ஜ.வில் மீண்டும் இணைந்தால் கவர்னர் பதவி தரப்படலாம். தமிழ்நாட்டிற்கு அவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளிவருகின்றன.

Tags: 

Leave a Reply