மதம் மாறி திருமணம்: தூக்கு விதிக்கப்பட்ட சூடான் பெண் விரைவில் விடுதலை

மதம் மாறி திருமணம்: தூக்கு விதிக்கப்பட்ட சூடான் பெண் விரைவில் விடுதலை கார்டோம், மே. 16–

ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக வளர்ந்த இவர் தனது பெயரை மெரியம் யெக்யா இப்ராகிம் இசாக் என மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டார். இதற்கிடையே, இவர் மதம் மாறி திருமணம் செய்ததாக கூறி அவர் மீது கார்டோம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது.

ஜோர்டான் ஒரு முஸ்லிம் நாடு. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு மதத்தினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மதம் மாறி திருமணம் செய்த மரியத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை, சிறை ஆஸ்பத்தரியில் மெரியம்முக்கு இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்தது. மதரீதியான தண்டனை என்ற வாதத்தை கைவிட்டு, மனிதநேய அடிப்படையில் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், தூக்கு தண்டனையை எதிர்நோக்கி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மெரியம் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்ற இனிப்பான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சூடான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் அப்துல்லாஹி அல்ஸரெக்கின் பேட்டியை மேற்கோள் காட்டி சூடான் ஊடகங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளன.

Tags: 

Leave a Reply